சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு நேரமில்லா நேரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, “காரைக்குடி கல்லூரிக்கு அருகாமையில் மத்திய அரசு ராட்சத எந்திரங்களை இறக்கியுள்ளதாகவும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களும் விவசாயிகளும் அச்ச மடைந்துள்ளதாகவும் இதுகுறித்து மாநில அரசுக்கு தெரியுமா? என்று கேட்டார்.